யாழில் பெருமெடுப்பினில் திலீபன் நினைவேந்தல் கட்ச்சிகள்,பொதுஅமைப்புகள் கூட்டுமுயற்ச்சியில்!

தியாகி திலீபன் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நிகழ்வுகளை பொது அமைப்புக்கள் மற்றும் கட்சிகளுடன் இணைந்து நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எதிர்வரும் 26.09-2017 அன்று முற்பகல் 10.30 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகும். இந்நிகழ்வில் பொது மக்கள், அனைத்து அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொது அமைப்புக்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
ஒட்டுமொத்த தமிழ்த் தேசத்தின் விடுதலைக்காக தனது உடலை மெழுகாய் உருக்கி மண்ணுக்காக மரணித்த மாவீரனுக்கு வணக்கம் செலுத்த வேண்டியது தமிழ் தேசத்து மக்கள் அனைவதும் கடமையாகும்.
குறித்த நிகழ்வில் அரச நிர்வாக திணைக்களங்கள், கல்வித்திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவன விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள், மாணவர்கள் அனைவரும் குறித்த நிகழ்வில் எதிர்வரும் 26-09-2017 (செவ்வாய்க்கிழமை) கலந்து கொள்ள ஆவன செய்து ஒத்துழைக்குமாறு சம்பந்தப்பட்ட மாகாண அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள், தனியார் நிறுவன உரிமையாளர்கள், அரச சார்பற்ற நிறுவன தலைவர்கள் அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

நன்றி

செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி