இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரு போட்டிகளுக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் இரு போட்டிகளுக்கான ஆஸ்திரேலியா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் 23-ம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது.

இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய ஆயுதமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் மற்றும் ஹசில்வுட் ஆகியோர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிரிஸ்பேன் மற்றும் அடிலெய்டில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அணி வீரர்கள் விவரம் வருமாறு:

ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், கேமரூன் பாங்க்ரூப், ஜாக்சன் பேர்ட், பாட் கம்மின்ஸ், பீட்டர் ஹான்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட், உஸ்மான் கவாஜா, நாதன் லியான், ஷான் மார்ஷ், டிம் பைன், சாட் சையர்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க்

ஏற்கனவே, 2013-14-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 0-5 என படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.