மதுரை சிறையில் கைதிகள் மோதல்!

மதுரை மகபூப்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன். கடந்த மாதம் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நத்தத்தை சேர்ந்த சுந்தரராஜன் (எ) விரல் வெட்டி, மாயகிருஷ்ணன் (எ) ஏட்டையா, ஆனந்தகுமார் (எ) துப்பாக்கி மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதிகளாக உள்ளனர். அதே பிளாக்கில் விசாரணை கைதியாக, இறந்த மணிகண்டனின் உறவினர் வித்யானந்தம் உள்ளார்.

இவர், சிவக்குமார், சதாம்உசேன், ராஜா ஆகியோருடன் சேர்ந்து, நேற்று காலை சிறைக்குள் சுந்தரராஜன் உள்ளிட்ட 3 பேரையும் சரமாரியாக தாக்கினார். போலீசார் அவர்களை விலக்கிவிட்டனர். இந்த தாக்குதலில் சுந்தரராஜன் உள்ளிட்ட 3 பேரும் படுகாயமடைந்தனர். இவர்களுக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.