அடி­மட்ட ஊழலைத் தடுத்­தால் மேல் மட்­டத்­தி­லும் ஊழ­லைத் தடுக்க முடியும்!

கீழ் நிலை­யில் உள்ள மக்­கள் இன்­னும் சாதா­ரண விட­யங்­க­ளுக்­கும் கையூட்­டுக் கொடுக்க வேண்­டிய நிலமை உள்­ளது. கையூட்டு மற்­றும் ஊழல் விசா­ரணை ஆணைக்­குழு வேக­மா­கச் செயற்­பட வேண்­டும். அடி­மட்ட ஊழ லைத் தடுக்க இத­னூ­டா­கவே முடி­யும். அடி­மட்ட ஊழலைத் தடுத்­தால் மேல் மட்­டத்­தி­லும் ஊழ­லைத் தடுக்க முடி­யும்.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வியா­ழேந்­தி­ரன் தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று முன்தினம் 2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு   செல­வுத் திட்­டத்­தில் அரச தலை­வர், தலைமை அமைச்­சர், எதிர்க்­கட்சித் தலை­வர், ஆணைக் கு­ழுக்­கள், திணைக்­க­ளங்­கள் ஆகி­ய­வற்­றுக்­கான ஒதுக்­கீடு மீதான குழு­நிலை விவா­தத்­தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

நாட்­டில் காணி உறு­திப்­பத்­தி­ரத்தைப் பெறு­வ­தற்குக் கையூட்­டுக் கொடுக்க வேண்­டிய நிலமை உள்­ளது. அடி­மட்­டத்­தில் இருக்­கின்ற மக்­கள் பல்­வே­றுபட்ட இன்­னல்­க­ளுக்கு முகம் கொடுக்­கின்­ற­னர். பலர் கிரா­மத்­தில் இருந்து நக­ரத்­ துக்கு வர முடி­யாத கட்­டத்­தில் கையூட்­டுக் கொடுக்­கும் நிலை இன்­னும் உள்­ளது.

ஆணைக்­கு­ழுக்­கள் வேக­மா­கச் செயற்­பட்­டால் அடி­மட்­டத்­தில் இருந்து ஆரம்­பிக்­கும் ஊழல் மேல் மட்­டம் வரை வராது. எந்­த­வொரு தலை­யீ­டும் இல்­லாத சுதந்­தி­ரத்தை கையூட்டு மற்­றும் ஊழல் விசா­ரணை ஆணைக்­கு­ழு­வுக்கு நல்­லாட்சி அரசு வழங்க வேண்­டும்.

இலங்­கை­யில் அனைத்துக் கிரா­மங்­க­ளிலும் காடு­கள் அழிக்­கப்­பட்டு வய­லாக்கி வீடு கட்டி வாழ்ந்து வரும் நிலை­யில் தொல்­பொ­ருள், வனத் திணைக்­கள அதி­கா­ரி­கள் வந்து அதனை மீண்­டும் மக்­க­ளி­டம் இருந்து சுவீ­க­ரித்து வரு­கின்­ற­னர்.இதனால் மூவின மக்­க­ளும் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

முப்­பது வரு­டங்­க­ளாக இருந்து வந்த நிலை­யில் இப்­படி நடந்­தால் என்ன நடக்­கும். கால் நடைப் பண்­ணை­யா­ளர் பலர் விரட்­டப்­பட்­டுள்­ளனர். நாம் மனித நேயத்­து­டன் சிந்­திக்கவேண்­டும்.

கிழக்கு மாகாணப் பொலிஸ் அதி­கா­ரி­கள் வேறு மாகா­ணங்­க­ளுக்கு இடமாற்­றம் செய்­யப்­ப­டு­கின்­ற­னர். தற்­போ­தைக்கு தமிழ் முறைப்­பா­டு­கள் செய்­வ­தில் சிக்­கல் நிலை உள்­ளது. தமிழ் அதி­கா­ரி­கள் இல்­லா­மை­யால் பிரச்­சினைகள் இருக்­கின்­றன. தற்­போதே தமி­ழர்­கள் பொலி­ஸில் இணை­கின்­ற­னர்.

தமிழ் பேசும் அதி­கா­ரி­களை இடமாற்­றம் செய்­வ­தால் அதி­கா­ரி­களுக்குப் பற்­றாக்­குறை ஏற்­ப­டும். அதனை நிறுத்த வேண்­டும். சட்­டம் ஒழுங்கு அமைச்­சர் நட­வ­டிக்கை எடுக்கவேண்­டும். வழக்குத் தாம­தத்­தால் குற்­ற­வா­ளி­கள் பலர் வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்­லும் நில­மை­கள் காணப்­ப­டு­கின்­றன.

பாலி­யல் துர்­ந­டத்தை, கொலைக் குற்­றச்­சாட்­டில் உள்­ள­வர்­கள் பிணை­யில் வரும் போது அவர்­கள் வெளி­நா­டு­க­ளுக்குத் தப்பிச் செல்­கின்­ற­னர். இது தொடர்­பில் அவ­தா­னம் செலுத்த வேண்­டும்.

அனை­வ­ரை­யும் சம­மாகக் காணும் நீதித்­துறை உரு­வாக வேண்­டும். கையூட்டு ஊழல் ஆணைக்­குழுவிற்குப் பெரிய பொறுப் பு­க்கள் உள்­ளன. இதற்கு அர­சி­யல் தலை­யீடு இருந்­தால் நிறுத்­தப்­பட வேண்­டும்  என்­றார்.