தமிழ்த்தாய் கலைமகனையிழந்து கண்ணீரை காணிக்கை செய்கிறாள்.!

முகநூலில் உன்முகம் வர நாமோ
முன்னேதும் தெரியாமல் திணற
இடியோசை கேட்டதுவோ மகனே
இனி நீ இல்லையென்ற செய்தியடா!

முன்ஸ்ரர் கலைவாணி மேடையுனதாக்க
முன் அமர்ந்து நான் வியந்தேனடா
மிருதங்கம் உனைமிஞ்ச நீ அதைமிஞ்ச
மிருதங்க வித்துவானே ஜயகோ!!!!

அன்பான பேச்சு அதைவிட புன்சிரிப்பு
அழகான கட்டிளம் காளை நீ மகனே
அத்தனையும் போச்சே போட போ…
அப்பன் அம்மா எப்படித்தான் ஆறுவரோ

இராஜகூட்டு பறவை நீ அப்பன் முத்து நீ
இராஜகிளிபோல வாழ மறுத்து நீ
எங்கு சென்றாய் ஏன் சென்றாயோ
ஏங்கி தவிக்குது மனம் மகனே ஹராம்

நீ எனக்கு சொந்தமில்லை நட்புமில்லை
நீ வாசித்த நாதம் சொந்தமாச்சு எனக்கு
மனம் இறுகியது மனம் கண்ணீர் சிந்தியது
மனதால் வடித்தேன் உனக்கு கவியான்.

அன்னாரின் இழப்பினால் தவிக்கும் குடும்பத்தார்களுடன் நாமும் பங்குகொண்டு ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

கி.த.கவிமாமணி
பொ.சுரேந்திரன் (அப்பன்)