கசகசாவில் வியக்கத்தக்க அற்புதமான நன்மைகள் இதோ!!

அலங்கார வேலைபாடுகளுக்காக பயன்படுத்தப்படும் பாப்பி எனும் மருத்துவ குணம் நிறைந்த செடியில் இருந்து கசகசா பெறப்படுகிறது.

அசைவ உணவுகளில் ருசியை அதிகரிப்பதற்காக கசகசா சேர்க்கப்படுவது உண்டு.

கசகசா, உணவில் சுவையை மட்டுமின்றி, உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.

கசகசாவின் மருத்துவ நன்மைகள்

2 தேக்கரண்டி அளவு கசகசாவை. ¼ டம்ளர் பாலில் ஊறவைத்து, பசைபோல அரைத்து, அதை குழந்தைகளுக்கு கொடுத்தால், சீதபேதி குணமாகும்.
½ கோப்பை அளவு கொப்பரைத் தேங்காயைப் பூவாகச் சீவி, ½ தேக்கரண்டி கசகசா சேர்த்து, அரைத்து, அதை துவையலாக, சாப்பிட்டால், வாய்ப்புண் குணமாகும்.
கசகசா, மிளகு, பாதாம், கற்கண்டு ஆகியவற்றைச் சமஅளவாக எடுத்து, நன்கு தூளாக்கி, அதனுடன் பசும்பால், தேன், நெய் ஆகியவற்றை தேவையான அளவு சேர்த்து, இலேகியமாக்கி, அதில் ½ தேக்கரண்டி அளவு, இரவில் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உடலின் வலிமை அதிகரிக்கும்.
குழந்தைகளின் அழுகையை குறைக்க கசகசாவை மைபோல் அரைத்து, குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவினால், குழந்தையின் அழுகை குறையும்.
10 கிராம் கசகசாவுடன் ஒரு பிடி வேப்பிலை, ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து அம்மை விழுந்த இடத்தில் தடவினால் அம்மை தழும்புகள் மறையும்.
வயிற்றுப்போக்கு ஏற்படும் போது சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால், வயிற்றுப்போக்கு குறையும்.
குறிப்பு

உடலுக்கு குளிர்ச்சி தரும் கசகசாவை அதிகம் சாப்பிட்டால், மயக்கம் ஏற்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.