கிளிநொச்சி ஊடகவியலாளர் மீது மாங்குளத்தில் ஆயுதங்களுடன் வந்த குழுவினர் தாக்குதல்!

(நிருபர் கிந்துஜன்)
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் நேற்று இரவு மூன்று மோட்டார் சைக்கிளில் இலக்கத் தகடுகளை மறைத்தவாறு வந்த வீதியோரம் நின்ற இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பியோடியவேளை ஊர் இளையர்களால் விரட்டிப் பிடிக்கப்பட்டனர்.

மாங்குளம் சந்தியில் இரவு 9 மணியளவில் வீதியோரம் நின்றவரை 3 மோட்டார் சைக்கிளில் இலக்கத்தகடுகளை துணியால் கட்டியவாறு வந்து தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பியோடும்போதே இளைஞர்களால் விரட்டிச் சென்று மடக்கிப்பிடிக்கப்பட்டனர்.

இவ்வாறு பிடிபட்டவரும் சுமார் 23 வயது மதிக்கத் தக்க இளைஞராகவும் மதுபோதையிலும் கானப்பட்டார். குறித்த சம்பவத்தில் மடக்கிப் பிடிக்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிள் இலக்கத் தகடுகள் துணிகளால் மூடிக்கட்டப்பட்டு முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் கானப்பட்டது.

தாக்கெதலிற்கு இலக்கானவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இதேநேரம் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட தாக்குதல்தாரி மற்றும் அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பன மாங்குளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொற்கொண்டு வருவதோடு தாக்குதல் மேற்கொண்ட ஏனையோரை கைது செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.