இந்த போலியான அப்பிளிக்கேஷன் தொடர்பில் எச்சரிக்கை!

பிரபல்யமான அப்பிளிக்கேஷன்களைப் போன்ற போலி அப்பிளிக்கேஷன்கள் உருவாக்கப்படுகின்றமை இன்று அதிக அளவில் இடம்பெற்று வருகின்றது.

இது தொடர்பில் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் பயனர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் அவ்வாறான அப்பிளிக்கேஷன்களை நீக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தன.

எனினும் போலி அப்பிளிக்கேஷன்களின் ஆக்கிரமிப்பு தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.

இந்த வரிசையில் MyEtherWallet எனும் அப்பிளிக்கேஷனுக்குரிய போலி அப்பிளிக்கேஷன் ஆப்பிளின் ஆப்ஸ் ஸ்டோரில் தரப்பட்டுள்ளது.

இதனை MyEtherWallet நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த போலி அப்பிளிக்கேஷன் 4.99 பவுண்ட்கள் செலுத்தி தரவிறக்கம் செய்யக்கூடிய வகையில் காணப்படுகின்றது.

எனினும் இதனை தவறுதலாக கைப்பேசிகளில் நிறுவினால் கைப்பேசிகளில் உள்ள தகவல்கள் திருட்டுபோகும் அபாயம் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.