ஜேர்மனியில் கேணல் கிட்டு அவர்களின்25ஆம் ஆண்டு நினைவெழுச்சி வணக்க நிகழ்வு!

21.01.2018 ஜேர்மனி வூப்பெற்றால் நகரில் வூப்பர் கலையரங்கத்தில் மாலை கேணல் கிட்டு ,லெப்டினன் கேணல் குட்டி சிறி உட்பட பத்து வேங்கைகளின் 25ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றது.
தேசியக்கொடி மத்திய மாநில செயற்ப்பாட்டாளர் றஞ்சன் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டது. வூப்பெற்றால் செயற்பாட்டாளர் மங்கள விளக்கேற்றினார்.தொடர்ந்து சுடர் ஏற்றல் ,கேணல் கிட்டு ,லெப்டினன் கேணல் குட்டி சிறி உட்பட பத்து வேங்கைகளுக்கு மலர்மாலையை ராட்டிங்கன் செயற்ப்பாட்டாளர் சிற்றம்பலம் அணிவித்தார். அகவணக்கத்தினை தொடர்ந்து மலர்அஞ்சலி வருகை தந்த மக்களால் செலுத்தப்பட்டது .நிகழ்வுகள் மதுரக்குரல் கண்ணன் குழுவினரால் காணங்கள் இசைக்கப்பட்டதை தொடர்ந்து நடனக்கலைகளும் சிறப்புரையும் இடம்றெ்றது.

சிறப்புரையில் முக்கியமாக இன்றய வணக்க நிகழ்வில் வருகை தந்த மக்கள் மிகக் கடும் குறைவாக இருப்பது ஆழ்ந்த கவலையளிப்பதாக தெருவித்தார். அத்துடன் மக்களே இன்றய சூழ்நிலையில் வடபகுதி தேர்தலில் உங்கள் உறவுளுக்கு தெளிபடுத்துங்கள் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்ற தமிழ் தேசிய பேரவைக்கு வாக்களிக்குமாறு
தெளிவூட்டப்பட்டது.

இந்நிகழ்வானது மாலை 19:50 மணிக்கு தேசியக் கொடியிறக்கத்துடன் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் இசையோடு இனிதே நிறைவு பெற்றது.

குறிப்பாக மத்திய மாநில செயல்ப்பாட்டாளர்கள் இளையோர் அமைப்பில் உள்ளவர்களும் குறைவாக காணப்பட்டனர்.இதற்க்கு தமிழ் அருள் இணையம் கவலையுடன் கண்டணத்தையும் தெரிவிக்கிறது.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*