எந்தக் கட்சிகளுடனும் கூட்டுச் சேர வேண்டும் என்ற நிலைப்பாடு எமக்கு இல்லை!

நாங்கள் இது வரைக்கும் யாருக்கும் ஆதரவு கொடுப்பதாக முடி வெடுக்கவில்லை. ஆதரவு வழங்குகின்ற நிலைப்பாடும் எமக்கு இல்லை.எனவே நாங்கள் தனித்து சுயாதீனமாக அனைத்து சபைகளிலும் இயங்குவோம் என தமிழர் விடுதலைக்கூட்டனியின் அங்கத்துவக்கட்சிகளின் ஒன்றான ஜனநாயக தமிழரசுக்கட்சியின் செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று திங்கட்கிழமை(12) மதியம் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,,,,

எங்களுடைய கட்சிக்கு விழுந்த வாக்குகள் அனைத்தும் ஒரு கொள்கைகளுக்காக விழுந்த வாக்குகள்.எனவே நாங்கள் எந்தக் கட்சிகளுடனும் கூட்டுச் சேர வேண்டும் என்ற நிலைப்பாடு எமக்கு இல்லை.

கொள்கை இல்லை என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இருந்து வெளியே வந்தவர்கள் நாங்கள்.எனவே நாங்கள் கொள்கை இல்லாதவர்களுக்கு ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்குவதற்கான ஒரு சூழ்நிலை இருக்காது.

அவர்கள் கொள்கையோடும் கோட்பாட்டோடும் ஒற்றையாட்சிக்கு இனங்காத ஒரு நிலைப்பாட்டும், சமஸ்டி அடிப்படையினை கொண்டு வருகின்ற ஒரு போக்கும் புதிய அரசியல் அமைப்பில் உள்ளீர்க்கப்பட வேண்டி விடையங்களை வெளிப்படையாக பகிர்ந்து பேசக்கூடிய ஒரு வாதத்திற்கும் அவர்கள் வந்து தலைமை நீக்கத்திற் குற்படுத்தப்பட்டு ஒரு புதிய சூழலுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு வருமாக இருந்தால் எமது அங்கத்தவர்கள் நிபந்தனை அற்ற ஆதரவு வழங்க தயாராக இருப்பார்கள்.எனவே இன்றைய சூழ்நிலையில் கொள்கை இல்லாதவர்களை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.

எனினும் எங்களுக்கு வாழ்களித்த அனைத்து மக்களுக்கும் நாங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

-பல்வேறு சவால்களுக்கு மத்தியில் எமக்கு இருந்த எதிர்ப்புகள் மற்றும் கறி பூசுதலுக்கு மேலாகவும் எங்களை நம்பி மக்கள் வாக்களித்துள்ளனர்.

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் புதிதாக இணைந்துள்ள கூட்டினால் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.

அதிகளவிலான வாக்குகளை பெற்று அங்கத்துவர்களையும் பெற்றுக்கொண்டுள்ளோம்.எமது வெற்றி தமிழ் தேசிய அரசியலில் ஒரு மாற்று சக்தியாக அமைந்துள்ளது.

-தமிழ் மக்களுக்கு இவ் மாற்றம் தேவை என்பதனை நிருபித்துள்ளது.எனவே இத்தேர்தலின் மூலம் மிகத்தெளிவாக ஒரு விடையம் வெளிப்பட்டுள்ளது.

-தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு வடக்கு கிழக்கு ரீதியாக 40 வீதத்திற்கு குறைவான வாக்கு அளிக்கப்பட்டுள்ளது.தமிழ் மக்கள் எப்போதும் கொள்கை சார்ந்து செயற்படக்கூடியவர்கள்.

-அக்கொள்கையின் பிரகாரம் செயலாற்ற முடியாதவர்கள் இனக்க அரசியல் நடாத்துபவர்கள்,அரசாங்கத்தோடு கொள்கையினை விட்டு இறங்கிப் போகின்றவர்கள்,குறிப்பாக புதிய அரசியல் அமைப்பிலே ஏமாற்றமான வார்த்தைகளை பேசி தமிழ் தேசியக்கூட்டமைப்பு கபட நாடகத்தினை ஆடியதினால் மக்கள் தகுந்த பாடத்தை வழங்கி உள்ளனர்.என அவர் மேலும் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*